தொடக்கம் |
|
|
1 | குருகு பாய, கொழுங் கரும்புகள் நெரிந்த சாறு அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரைப் பருகும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், நினைந்து உருகும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
2 | பறக்கும் எம் கிள்ளைகாள்! பாடும் எம் பூவைகாள்! அறக்கண் என்னத் தகும் அடிகள் ஆரூரரை மறக்ககில்லாமையும், வளைகள் நில்லாமையும், உறக்கம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
3 | சூழும் ஓடிச் சுழன்று உழலும் வெண் நாரைகாள்! ஆளும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரர்க்கு வாழும் ஆறும், வளை கழலும் ஆறும்(ம்), எனக்கு ஊழும் மாறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
4 | சக்கிரவாளத்து இளம் பேடைகாள்! சேவல்காள்! அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு, வக்கிரம் இல்லாமையும், வளைகள் நில்லாமையும், உக்கிரம் இல்லாமையும், உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
5 | இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்! அலை கொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு, கலைகள் சோர்கின்றதும், கன வளை கழன்றதும், முலைகள் பீர் கொண்டதும், மொழிய வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
6 | வண்டுகாள்! கொண்டல்காள்! வார் மணல் குருகுகாள்! அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரைக் கண்ட ஆறும், காமத்தீக் கனன்று எரிந்து மெய் உண்ட ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
7 | தேன் நலம் கொண்ட தேன்! வண்டுகாள்! கொண்டல்காள்! ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு, பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன் ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
8 | சுற்று முற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்! அற்றம் முற்றப் பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு, பற்று மற்று இன்மையும், பாடு மற்று இன்மையும், முற்றும் மற்று இன்மையும், மொழிய வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
9 | குரவம் நாற, குயில் வண்டு இனம் பாட, நின்று அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரைப் பரவி நாடு(ம்)மதும், பாடி நாடு(ம்)மதும், உருகி நாடு(ம்)மதும், உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
10 | கூடும் அன்னப் பெடைகாள்! குயில்! வண்டுகாள்! ஆடும் அம் பொன்கழல் அடிகள் ஆரூரரைப் பாடும் ஆறும், பணிந்து ஏத்தும் ஆறும், கூடி ஊடும் ஆறும்(ம்), இவை உணர்த்த வல்லீர்களே? . |
|
உரை
|
|
|
|
|
11 | நித்தம் ஆக(ந்) நினைந்து உள்ளம் ஏத்தித் தொழும் அத்தன், அம் பொன்கழல் அடிகள், ஆரூரரைச் சித்தம் வைத்த புகழ்ச் சிங்கடி அப்பன்-மெய்ப்- பத்தன், ஊரன்-சொன்ன பாடுமின், பத்தரே! . |
|
உரை
|
|
|
|