தொடக்கம் |
|
|
7.41 திருக்கச்சூர் ஆலக்கோயில் கொல்லிக்கௌவாணம் |
1 | முது வாய் ஓரி கதற, முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே! மது வார் கொன்றைப் புதுவீ சூடும் மலையான் மகள் தன் மணவாளா! கதுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் கவலாரே? அதுவே ஆம் ஆறு இதுவோ? கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
2 | கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து, கழலும் சிலம்பும் கலிக்க, பலிக்கு என்று உச்சம் போதா ஊர் ஊர் திரியக் கண்டால் அடியார் உருகாரே? இச்சை அறியோம்; எங்கள் பெருமான்! ஏழ் ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்! அச்சம் இல்லாக் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
3 | சாலக் கோயில் உள நின் கோயில்; அவை என் தலை மேல் கொண்டாடி மாலைத் தீர்ந்தேன்; வினையும் துரந்தேன்-வானோர் அறியா நெறியானே! கோலக் கோயில் குறையாக் கோயில் குளிர் பூங் கச்சூர் வடபாலை ஆலக்கோயில், கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
4 | விடையும் கொடியும் சடையும் உடையாய்! மின் நேர் உருவத்து ஒளியானே! கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னி மாடம் கலந்து, எங்கும் புடையும் பொழிலும் புனலும் தழுவி, பூமேல்-திருமாமகள் புல்கி, அடையும் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
5 | மேலை விதியே! வினையின் பயனே! விரவார் புரம் மூன்று எரி செய்தாய்! காலை எழுந்து தொழுவார் தங்கள் கவலை களைவாய்! கறைக் கண்டா! மாலை மதியே! மலை மேல் மருந்தே! மறவேன், அடியேன்; வயல் சூழ்ந்த ஆலைக் கழனிப் பழனக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
6 | பிறவாய்; இறவாய்; பேணாய், மூவாய்; பெற்றம் ஏறிப் பேய் சூழ்தல் துறவாய்; மறவாய், சுடுகாடு என்றும் இடமாக் கொண்டு நடம் ஆடி; ஒறுவாய்த் தலையில் பலி நீ கொள்ளக் கண்டால் அடியார் உருகாரே? அறவே ஒழியாய் கச்சூர் வடபால் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
7 | பொய்யே உன்னைப் புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளாக் கொள்வோனே! மெய்யே! எங்கள் பெருமான்! உன்னை நினைவார் அவரை நினை கண்டாய்! மை ஆர் தடங்கண் மங்கை பங்கா! கங்கு ஆர் மதியம் சடை வைத்த ஐயா! செய்யாய்! வெளியாய்! கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
8 | ஊனைப் பெருக்கி, உன்னை நினையாதொழிந்தேன், செடியேன்; உணர்வு இல்லேன்- கானக் கொன்றை கமழ மலரும் கடிநாறு உடையாய்! கச்சூராய்! மானைப் புரையும் மட மென் நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட ஆனைத்தோலாய்! ஞானக்கண்ணாய்! ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
9 | காதல் செய்து, களித்து, பிதற்றி, கடிமாமலர் இட்டு உனை ஏத்தி, ஆதல் செய்யும் அடியார் இருக்க, ஐயம் கொள்வது அழகிதே! ஓதக் கண்டேன்; உன்னை மறவேன்; உமையாள் கணவா! எனை ஆள்வாய்! ஆதல் பழனக் கழனிக் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே! . |
|
உரை
|
|
|
|
|
10 | அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை உன்ன முன்னும் மனத்து ஆரூரன்-ஆரூரன் பேர் முடி வைத்த மன்னு புலவன், வயல் நாவலர் கோன், செஞ்சொல் நாவன், வன்தொண்டன் பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலைமேல் பயில்வாரே . |
|
உரை
|
|
|
|