7.66 திருஆவடுதுறை
தக்கேசி
1மறையவன்(ன்) ஒரு மாணி வந்து அடைய, வாரம் ஆய், அவன் ஆர் உயிர் நிறுத்தக்
கறை கொள் வேல் உடைக் காலனைக் காலால் கடந்த காரணம் கண்டு கண்டு, அடியேன்,
“இறைவன், எம்பெருமான்” என்று எப்போதும் ஏத்தி ஏத்தி நின்று அஞ்சலி செய்து, உன்
அறை கொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
உரை
   
2தெருண்ட வாய் இடை நூல் கொண்டு சிலந்தி சித்திரப் பந்தர் சிக்கென இயற்ற,
சுருண்ட செஞ்சடையாய்! அது தன்னைச் சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு, அடியேன்,
புரண்டு வீழ்ந்து நின் பொன்மலர்ப் பாதம், “போற்றி போற்றி!” என்று அன்பொடு புலம்பி,
அருண்டு, என் மேல்வினைக்கு அஞ்சி, வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
உரை
   
3திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய,
புகழினால் அவன் கண் இடந்து இடலும், புரிந்து, சக்கரம் கொடுத்தல் கண்டு, அடியேன்,
திகழும் நின் திருப்பாதங்கள் பரவி, தேவதேவ! நின் திறம்பல் பிதற்றி,
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
உரை
   
4வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி, விசைத்து, ஒர் கேழலைத் துரந்து, சென்று, அணைந்து,
போரைத் தான் விசயன் தனக்கு அன்பு ஆய்ப் புரிந்து, வான் படை கொடுத்தல் கண்டு,                                                                                              அடியேன்,
வாரத்தால் உன நாமங்கள் பரவி, வழிபட்டு, உன் திறமே நினைந்து, உருகி,
ஆர்வத்தோடும் வந்து, அடி இணை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
உரை
   
5ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ, உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு, மற்றவர் பொன்னுலகு ஆளப் புகழினால் அருள் ஈந்தமை அறிந்து,
மிக்க நின் கழலே தொழுது, அரற்றி, வேதியா! ஆதி மூர்த்தி! நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான்! உனை அடைந்தேன்-ஆவடுதுறை ஆதி எம்மானே! .
உரை