தொடக்கம் |
|
|
1 | கரையும், கடலும், மலையும், காலையும், மாலையும், எல்லாம் உரையில் விரவி வருவான்; ஒருவன்; உருத்திரலோகன்; வரையின் மடமகள் கேள்வன்; வானவர் தானவர்க்கு எல்லாம் அரையன்; இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
2 | “தனியன்” என்று எள்கி அறியேன்; தம்மைப் பெரிதும் உகப்பன்; முனிபவர் தம்மை முனிவன்; முகம் பல பேசி மொழியேன்; கனிகள் பல உடைச் சோலைக் காய்க்குலை ஈன்ற கமுகின் இனியன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
3 | சொல்லில் குலா அன்றிச் சொல்லேன்; தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்; கல்லில் வலிய மனத்தேன்; கற்ற பெரும் புலவாணர் அல்லல் பெரிதும் அறுப்பான், அருமறை ஆறு அங்கம் ஓதும் எல்லை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
4 | நெறியும், அறிவும், செறிவும், நீதியும், நான் மிகப் பொல்லேன்; மிறையும் தறியும் உகப்பன்; வேண்டிற்றுச் செய்து திரிவேன்; பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செஞ்சடை வைத்த இறைவன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
5 | நீதியில் ஒன்றும் வழுவேன்; நிட்கண்டகம் செய்து வாழ்வேன்; வேதியர் தம்மை வெகுளேன்; வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்; சோதியில் சோதி எம்மானை, சுண்ண வெண் நீறு அணிந்திட்ட ஆதி, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
6 | அருத்தம் பெரிதும் உகப்பேன்; அலவலையேன்; அலந்தார்கள் ஒருத்தர்க்கு உதவியேன் அல்லேன்; உற்றவர்க்குத் துணை அல்லேன்; பொருத்த மேல் ஒன்றும் இலாதேன்; புற்று எடுத்திட்டு இடம் கொண்ட அருத்தன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
7 | சந்தம் பல அறுக்கில்லேன்; சார்ந்தவர் தம் அடிச் சாரேன்; முந்திப் பொரு விடை ஏறி மூ உலகும் திரிவானே, கந்தம் கமழ் கொன்றை மாலைக் கண்ணியன், விண்ணவர் ஏத்தும் எந்தை, இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
8 | நெண்டிக் கொண்டேயும் கிலாய்ப்பன்; நிச்சயமே; இது திண்ணம்; மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன்; மெய்ப்பொருள் அன்றி உணரேன்; பண்டு அங்கு இலங்கையர் கோனைப் பருவரைக் கீழ் அடர்த்திட்ட அண்டன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
9 | நமர், பிறர், என்பது அறியேன்; நான் கண்டதே கண்டு வாழ்வேன்; தமரம் பெரிதும் உகப்பன்; தக்க ஆறு ஒன்றும் இலாதேன்; குமரன், திருமால், பிரமன் கூடிய தேவர் வணங்கும் அமரன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
10 | ஆசை பல அறுக்கில்லேன்; ஆரையும் அன்றி உரைப்பேன்; பேசில் சழக்கு அலால் பேசேன்; பிழைப்பு உடையேன், மனம் தன்னால்; ஓசை பெரிதும் உகப்பேன்; ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட ஈசன் இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! |
|
உரை
|
|
|
|
|
11 | “எந்தை இருப்பதும் ஆரூர்; அவர் எம்மையும் ஆள்வரோ? என்று சிந்தை செயும் திறம் வல்லான், திரு மருவும் திரள் தோளான், மந்த முழவம் இயம்பும் வளவயல் நாவல் ஆரூரன் சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே. |
|
உரை
|
|
|
|