தொடக்கம் |
|
|
7.82 திருச் சுழியல் நட்டராகம் |
1 | ஊன் ஆய், உயிர் புகல் ஆய், அகலிடம் ஆய், முகில் பொழியும் வான் ஆய், அதன் மதி ஆய், விதி வருவான் இடம்-பொழிலின் தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும்-திருச் சுழியல், நானாவிதம் நினைவார்தமை நலியார், நமன்தமரே. |
|
உரை
|
|
|
|
|
2 | தண்டு ஏர் மழுப்படையான், மழவிடையான், எழு கடல் நஞ்சு உண்டே புரம் எரியச் சிலை வளைத்தான்,-இமையவர்க்கா,- திண் தேர்மிசை நின்றான் அவன், உறையும் திருச் சுழியல்- தொண்டே செய வல்லார் அவர் நல்லார்; துயர் இலரே. |
|
உரை
|
|
|
|
|
3 | கவ்வைக் கடல் கதறிக் கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற, கொவ்வைத்துவர் வாயார் குடைந்து ஆடும் திருச் சுழியல், தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார், அவ் அத் திசைக்கு அரசு ஆகுவர்; அலராள் பிரியாளே. |
|
உரை
|
|
|
|
|
4 | மலையான் மகள் மடமாது இடம் ஆகத்தவன், மற்றுக் கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான், திருச் சுழியல் அலை ஆர் சடை உடையான், அடி தொழுவார் பழுது உள்ளம் நிலையார்; திகழ் புகழால் நெடுவானத்து உயர்வாரே. |
|
உரை
|
|
|
|
|
5 | உற்றான், நமக்கு; உயரும் மதிச் சடையான்; புலன் ஐந்தும் செற்று ஆர் திருமேனிப் பெருமான்; ஊர் திருச் சுழியல் பெற்றான், இனிது உறைய; திறம்பாமைத் திருநாமம் கற்றார் அவர் கதியுள் செல்வர்; ஏத்தும்(ம்)மது கடனே. |
|
உரை
|
|
|
|
|
6 | மலம் தாங்கிய பாசப் பிறப்பு அறுப்பீர்! துறைக் கங்கைச்- சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திருச் சுழியல் நிலம் தாங்கிய மலரால்; கொழும் புகையால், நினைந்து ஏத்தும்! தலம் தாங்கிய புகழ் ஆம்; மிகு தவம் ஆம்; சதுர் ஆமே! |
|
உரை
|
|
|
|
|
7 | சைவத்த செவ் உருவன்; திருநீற்றன்(ன்), உரும் ஏற்றன்; கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும்(ம்) எரிசெய்தான்; தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன்; திருச் சுழியல் மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல்(ல்) எளிது அன்றே! |
|
உரை
|
|
|
|
|
8 | பூ ஏந்திய பீடத்தவன் தானும், அடல் அரியும், கோ ஏந்திய வினயத்தொடு குறுகப் புகல் அறியார்- சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திருச் சுழியல், மா ஏந்திய கரத்தான், எம சிரத்தான் தனது அடியே. |
|
உரை
|
|
|
|
|
9 | கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி செண்டு ஆடுதல் புரிந்தான் திருச் சுழியல் பெருமானைக் குண்டாடிய சமண் ஆதர்கள் குடைச் சாக்கியர் அறியா, மிண்டாடிய அது செய்தது(வ்) ஆனால், வரு விதியே, |
|
உரை
|
|
|
|
|
10 | நீர் ஊர் தரு நிமலன், திருமலையார்க்கு அயல் அருகே தேர் ஊர் தரும் அரக்கன் சிரம் நெரித்தான், திருச் சுழியல் பேர் ஊர் என உறைவான், அடிப்பெயர் நாவலர்கோமான் ஆரூரன-தமிழ்மாலைபத்து அறிவார் துயர் இலரே. |
|
உரை
|
|
|
|