2நாறு செங்கழு நீர்மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு,
சேறு செய் கழனிப் பழனத் திருப் பனையூர்,
நீறு பூசி, நெய் ஆடி, தம்மை நினைப்பவர் தம் மனத்தர் ஆகி நின்று,
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே.
உரை
   
4வாளை பாய,-மலங்கு, இளங்கயல், வரிவரால், உகளும்-கழனியுள்
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திருப் பனையூர்,
தோளும் ஆகமும் தோன்ற, நட்டம் இட்டு ஆடுவார்; அடித்தொண்டர் தங்களை
ஆளும் ஆறு வல்லார்; அவரே அழகியரே.
உரை
   
6காவிரி புடை சூழ் சோணாட்டவர் தாம் பரவிய கருணை அம் கடல்; அப்
பா விரி புலவர் பயிலும் திருப் பனையூர்,
மா விரி மட நோக்கி அஞ்ச, மதகரி உரி போர்த்து உகந்தவர்;
ஆவில் ஐந்து உகப்பார்; அவரே அழகியரே.
உரை
   
8மண் எலாம் முழவம் அதிர்தர, மாட மாளிகை கோபுரத்தின் மேல்,
பண் யாழ் முரலும் பழனத் திருப் பனையூர்,
வெண்நிலாச் சடை மேவிய-விண்ணவரொடு மண்ணவர் தொழ-
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே.
உரை
   
10வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர்-மா தவர் வளரும், வளர் பொழில்,
பஞ்சின் மெல் அடியார் பயிலும்-திருப் பனையூர்,
வஞ்சியும் வளர் நாவலூரன்வனப்பகை அவள் அப்பன், வன்தொண்டன்
செஞ்சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே.
உரை