தொடக்கம் |
ஆனந்தாதீதம்
|
|
|
மாறு இலாத மாக் கருணை வெள்ளமே! வந்து முந்தி நின் மலர்கொள் தாள் இணை, வேறு இலாப் பதப் பரிசு பெற்ற, நின் மெய்ம்மை அன்பர், உன் மெய்ம்மை மேவினார்; ஈறு இலாத நீ, எளியை ஆகி வந்து, ஒளிசெய் மானிடம் ஆக, நோக்கியும், கீறு இலாத நெஞ்சு உடைய நாயினேன் கடையன் ஆயினேன் பட்ட கீழ்மையே. |
|
உரை
|
|
|
|
|
மை இலங்கு நல் கண்ணி பங்கனே! வந்து எனைப் பணிகொண்ட பின், மழக் கை இலங்கு பொன் கிண்ணம் என்று அலால், அரியை என்று உனைக் கருதுகின்றிலேன்; மெய் இலங்கு வெள் நீற்று மேனியாய், மெய்ம்மை அன்பர் உன் மெய்ம்மை மேவினார்; பொய்யில் இங்கு எனைப் புகுதவிட்டு, நீ போவதோ? சொலாய், பொருத்தம் ஆவதே? |
|
உரை
|
|
|
|
|
பொருத்தம் இன்மையேன்; பொய்ம்மை உண்மையேன்; `போத' என்று எனைப் புரிந்து நோக்கவும், வருத்தம் இன்மையேன்; வஞ்சம் உண்மையேன்; மாண்டிலேன்; மலர்க் கமல பாதனே, அரத்த மேனியாய், அருள்செய் அன்பரும், நீயும், அங்கு எழுந்தருளி, இங்கு எனை இருத்தினாய்; முறையோ? என் எம்பிரான், வம்பனேன் வினைக்கு இறுதி இல்லையே? |
|
உரை
|
|
|
|
|
இல்லை நின் கழற்கு அன்பு அது, என்கணே; ஏலம் ஏலும் நல் குழலி பங்கனே! கல்லை மென் கனி ஆக்கும் விச்சை கொண்டு, என்னை நின் கழற்கு அன்பன் ஆக்கினாய்; எல்லை இல்லை நின் கருணை; எம்பிரான்! ஏது கொண்டு, நான் ஏது செய்யினும், வல்லையே எனக்கு இன்னும் உன் கழல் காட்டி, மீட்கவும், மறு இல் வானனே? |
|
உரை
|
|
|
|
|
வான நாடரும் அறி ஒணாத நீ, மறையில் ஈறும் முன் தொடர் ஒணாத நீ, ஏனை நாடரும் தெரி ஒணாத நீ, என்னை இன்னிதாய் ஆண்டுகொண்டவா, ஊனை நாடகம் ஆடுவித்தவா, உருகி, நான் உனைப் பருக வைத்தவா, ஞான நாடகம் ஆடுவித்தவா நைய வையகத்துடைய விச்சையே! |
|
உரை
|
|
|
|
|
விச்சு அது இன்றியே, விளைவு செய்குவாய்; விண்ணும், மண்ணகம் முழுதும், யாவையும், வைச்சு வாங்குவாய்; வஞ்சகப் பெரும் புலையனேனை, உன் கோயில் வாயிலில் பிச்சன் ஆக்கினாய்; பெரிய அன்பருக்கு உரியன் ஆக்கினாய்; தாம் வளர்த்தது, ஓர் நச்சு மா மரம் ஆயினும், கொலார்; நானும் அங்ஙனே, உடைய நாதனே! |
|
உரை
|
|
|
|
|
உடைய நாதனே, போற்றி! நின் அலால் பற்று, மற்று எனக்கு ஆவது ஒன்று இனி உடையனோ? பணி; போற்றி! உம்பரார் தம் பரா பரா, போற்றி! யாரினும் கடையன் ஆயினேன்; போற்றி! என் பெரும் கருணையாளனே, போற்றி! என்னை, நின் அடியன் ஆக்கினாய்; போற்றி! ஆதியும், அந்தம், ஆயினாய், போற்றி! அப்பனே! |
|
உரை
|
|
|
|
|
அப்பனே, எனக்கு அமுதனே, ஆனந்தனே, அகம் நெக அள்ளூறு தேன் ஒப்பனே, உனக்கு உரிய அன்பரில் உரியனாய், உனைப் பருக நின்றது ஓர் துப்பனே, சுடர் முடியனே, துணையாளனே, தொழும்பாளர் எய்ப்பினில் வைப்பனே, எனை வைப்பதோ, சொலாய் நைய, வையகத்து, எங்கள் மன்னனே? |
|
உரை
|
|
|
|
|
மன்ன, எம்பிரான், `வருக' என் எனை; மாலும், நான்முகத்து ஒருவன், யாரினும் முன்ன, எம்பிரான், `வருக' என் எனை; முழுதும் யாவையும் இறுதி உற்ற நாள் பின்ன, எம்பிரான், `வருக' என் எனை; பெய்கழற்கண் அன்பாய், என் நாவினால் பன்ன, எம்பிரான், `வருக' என் எனை பாவநாச, நின் சீர்கள் பாடவே. |
|
உரை
|
|
|
|
|
பாட வேண்டும் நான்; போற்றி! நின்னையே பாடி, நைந்து நைந்து உருகி, நெக்கு நெக்கு, ஆட வேண்டும் நான்; போற்றி! அம்பலத்து ஆடும் நின் கழல் போது, நாயினேன் கூட வேண்டும் நான்; போற்றி! இப் புழுக் கூடு நீக்கு எனை; போற்றி! பொய் எலாம் வீட வேண்டும் நான்; போற்றி! வீடு தந்து அருளு; போற்றி! நின் மெய்யர் மெய்யனே! |
|
உரை
|
|
|
|