தொடக்கம் |
திருப்படை ஆட்சி
|
|
|
கண்கள் இரண்டும் அவன்கழல் கண்டு களிப்பன ஆகாதே காரிகை யார்கள்தம் வாழ்விலென் வாழ்வு கடைப்படும் ஆகாதே மண்களில் வந்து பிறந்திடு மாறு மறந்திடும் ஆகாதே மாலறி யாமலர்ப் பாதம் இரண்டும் வணங்குதும் ஆகாதே பண்களி கூர்தரு பாடலொ டாடல் பயின்றிடும் ஆகாதே பாண்டிநன் னாடுடை யான்படை யாட்சிகள் பாடுதும் ஆகாதே விண்களி கூர்வதோர் வேதகம் வந்து வெளிப்படும் ஆகாதே மீன்வலை வீசிய கானவன் வந்து வெளிப்படு மாயிடிலே. |
|
உரை
|
|
|
|
|
ஒன்றினொடு ஒன்றும், ஒர் ஐந்தினொடு ஐந்தும், உயிர்ப்பதும் ஆகாதே? உன் அடியார் அடியார் அடியோம் என உய்ந்தன ஆகாதே? கன்றை நினைந்து எழு தாய் என வந்த கணக்கு அதும் ஆகாதே? காரணம் ஆகும் மன ஆதி குணங்கள் கருத்து உறும் ஆகாதே? நன்று, இது, தீது, என வந்த நடுக்கம் நடந்தன ஆகாதே? நாமும் மேல் ஆம் அடியாருடனே செல, நண்ணுதும் ஆகாதே? என்றும் என் அன்பு நிறைந்த பராஅமுது எய்துவது ஆகாதே? ஏறு உடையான், எனை ஆளுடை நாயகன், என்னுள் புகுந்திடிலே! |
|
உரை
|
|
|
|
|
பந்த விகார குணங்கள் பறிந்து மறிந்திடும் ஆகாதே? பாவனை ஆய கருத்தினில் வந்த பரா அமுது ஆகாதே? அந்தம் இலாத அகண்டமும் நம்முள் அகப்படும் ஆகாதே? ஆதி முதல் பரம் ஆய பரம் சுடர் அண்ணுவது ஆகாதே? செம் துவர் வாய் மடவார் இடர் ஆனவை சிந்திடும் ஆகாதே? சேல் அன கண்கள் அவன் திருமேனி திளைப்பன ஆகாதே? இந்திரஞால இடர்ப் பிறவித் துயர் ஏகுவது ஆகாதே? என்னுடை நாயகன் ஆகிய ஈசன் எதிர்ப்படும் ஆயிடிலே! |
|
உரை
|
|
|
|
|
என் அணி ஆர் முலை ஆகம் அளைந்து, உடன் இன்புறும் ஆகாதே? எல்லை இல் மாக் கருணைக் கடல் இன்று இனிது ஆடுதும் ஆகாதே? நல் மணி நாதம் முழங்கி, என் உள் உற, நண்ணுவது ஆகாதே? நாதன் அணித் திரு நீற்றினை நித்தலும் நண்ணுவது ஆகாதே? மன்னிய அன்பரில் என் பணி முந்துற வைகுவது ஆகாதே? மா மறையும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே? இன் இயல் செங்கழுநீர் மலர் என் தலை எய்துவது ஆகாதே? என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே! |
|
உரை
|
|
|
|
|
மண்ணினில் மாயை மதித்து, வகுத்த மயக்கு அறும் ஆகாதே? வானவரும் அறியா மலர்ப் பாதம் வணங்குதும் ஆகாதே? கண் இலி காலம் அனைத்தினும் வந்த கலக்கு அறும் ஆகாதே? காதல் செயும் அடியார் மனம் இன்று களித்திடும் ஆகாதே? பெண், அலி, ஆண், என, நாம் என, வந்த பிணக்கு அறும் ஆகாதே? பேர் அறியாத அனேக பவங்கள் பிழைத்தன ஆகாதே? எண் இலி ஆகிய சித்திகள் வந்து, எனை எய்துவது ஆகாதே? என்னை உடைப் பெருமான், அருள் ஈசன், எழுந்தருளப் பெறிலே! |
|
உரை
|
|
|
|
|
பொன் இயலும் திருமேனி வெண் நீறு பொலிந்திடும் ஆகாதே? பூ மழை, மாதவர் கைகள் குவிந்து, பொழிந்திடும் ஆகாதே? மின் இயல் நுண் இடையார்கள் கருத்து வெளிப்படும் ஆகாதே? வீணை முரன்று எழும் ஓசையில் இன்பம் மிகுத்திடும் ஆகாதே? தன் அடியார் அடி என் தலைமீது தழைப்பன ஆகாதே? தான் அடியோமுடனே உய வந்து, தலைப்படும் ஆகாதே? இன் இயம் எங்கும் நிறைந்து, இனிது ஆக இயம்பிடும் ஆகாதே? என்னை முன் ஆளுடை ஈசன், என் அத்தன், எழுந்தருளப் பெறிலே! |
|
உரை
|
|
|
|
|
சொல் இயலாது எழு தூ மணி ஓசை சுவை தரும் ஆகாதே? துண் என என் உளம் மன்னிய சோதி தொடர்ந்து எழும் ஆகாதே? பல் இயல்பு ஆய பரப்பு அற வந்த பரா பரம் ஆகாதே? பண்டு அறியாத பர அனுபவங்கள் பரந்து எழும் ஆகாதே? வில் இயல் நல் நுதலார் மயல் இன்று விளைந்திடும் ஆகாதே? விண்ணவரும் அறியாத விழுப் பொருள் இப் பொருள் ஆகாதே? எல்லை இலாதன எண் குணம் ஆனவை எய்திடும் ஆகாதே? இந்து சிகாமணி எங்களை ஆள, எழுந்தருளப் பெறிலே! |
|
உரை
|
|
|
|
|
சங்கு திரண்டு, முரன்று எழும் ஓசை தழைப்பன ஆகாதே? சாதி விடாத குணங்கள் நம்மோடு சலித்திடும் ஆகாதே? அங்கு இது நன்று, இது நன்று, எனும் மாயை அடங்கிடும் ஆகாதே? ஆசை எலாம், அடியார் அடியோம் எனும் அத்தனை ஆகாதே? செம் கயல் ஒண் கண் மடந்தையர் சிந்தை திளைப்பன ஆகாதே? சீர் அடியார்கள் சிவ அனுபவங்கள் தெரிந்திடும் ஆகாதே? எங்கும் நிறைந்து, அமுது ஊறு, பரம்சுடர் எய்துவது ஆகாதே? ஈறு அறியா மறையோன் எனை ஆள, எழுந்தருளப் பெறிலே! |
|
உரை
|
|
|
|