தொடக்கம் |
ஆனந்த மாலை
|
|
|
மின் நேர் அனைய பூம் கழல்கள் அடைந்தார் கடந்தார், வியன் உலகம்; பொன் நேர் அனைய மலர் கொண்டு போற்றா நின்றார், அமரர் எல்லாம்; கல் நேர் அனைய மனக் கடையாய், கழிப்புண்டு, அவலக் கடல் வீழ்ந்த என் நேர் அனையேன், இனி, உன்னைக் கூடும்வண்ணம் இயம்பாயே. |
|
உரை
|
|
|
|
|
என்னால் அறியாப் பதம் தந்தாய்; யான் அது அறியாதே கெட்டேன்; உன்னால் ஒன்றும் குறைவு இல்லை; உடையாய், அடிமைக்கு யார்? என்பேன்: பல் நாள் உன்னைப் பணிந்து ஏத்தும் பழைய அடியரொடும் கூடாது, என் நாயகமே! பிற்பட்டு, இங்கு, இருந்தேன் நோய்க்கு விருந்தாயே. |
|
உரை
|
|
|
|
|
சீலம் இன்றி, நோன்பு இன்றி, செறிவே இன்றி, அறிவு இன்றி, தோலின் பாவைக் கூத்தாட்டு ஆய், சுழன்று, விழுந்து, கிடப்பேனை மாலும் காட்டி, வழி காட்டி, வாரா உலக நெறி ஏற, கோலம் காட்டி, ஆண்டானை, கொடியேன் என்றோ கூடுவதே? |
|
உரை
|
|
|
|
|
கெடுவேன்; கெடுமா கெடுகின்றேன்; கேடு இலாதாய், பழி கொண்டாய்; படுவேன், படுவது எல்லாம், நான் பட்டால், பின்னைப் பயன் என்னே? கொடு மா நரகத்து அழுந்தாமே காத்து ஆட்கொள்ளும் குருமணியே, நடு ஆய் நில்லாது ஒழிந்தக்கால், நன்றோ, எங்கள் நாயகமே? |
|
உரை
|
|
|
|
|
தாய் ஆய் முலையைத் தருவானே, தாராது ஒழிந்தால், சவலையாய் நாயேன் கழிந்து போவேனோ? நம்பி, இனித்தான் நல்குதியே; தாயே என்று உன் தாள் அடைந்தேன்; தயா, நீ, என்பால் இல்லையே? நாயேன் அடிமை உடன் ஆக ஆண்டாய்; நான் தான் வேண்டாவோ? |
|
உரை
|
|
|
|
|
கோவே, அருள வேண்டாவோ? கொடியேன் கெடவே அமையுமே? `ஆ! ஆ!' என்னாவிடில், என்னை `அஞ்சேல்' என்பார் ஆரோ தன்? சாவார் எல்லாம் என் அளவோ? `தக்க ஆறு அன்று' என்னாரோ? தேவே! தில்லை நடம் ஆடீ! திகைத்தேன்; இனித்தான் தேற்றாயே! |
|
உரை
|
|
|
|
|
நரியைக் குதிரைப் பரி ஆக்கி, ஞாலம் எல்லாம் நிகழ்வித்து, பெரிய தென்னன் மதுரை எல்லாம் பிச்சு அது ஏற்றும் பெருந்துறையாய்! அரிய பொருளே! அவிநாசி அப்பா! பாண்டி வெள்ளமே! தெரிய அரிய பரஞ்சோதீ! செய்வது ஒன்றும் அறியேனே! |
|
உரை
|
|
|
|