110. அந்தியில் பிறை-மாலைக் காலத்தில் தோன்றுகின்ற சந்திரன். சிந்தையை விட்டு அவனிடத்தே அடங்குதலால், சிந்தை காணப்படாதாயிற்று. ‘ஏனைய கருவிகளையேயன்றி, எனப் பொருள் தருதலின், ‘‘சிந்தையும்’’ என்னும் உம்மை, இறந்தது தழுவிய எச்சம். அலங்கல்-அசைவின்கண். கெந்தியா (கந்தியா)-மணம் வீசி, புண்டரிகம்-.தாமரை மலர்.‘‘கெந்தியா உகளும் கெண்டை புண்டரிகம் கிழிக்கும்’’ என்றாராயினும்‘புண்டரிகம் கிழிக்கும் கெண்டை கெந்தியா உகளும்’ என்பது கருத்தென்க. கெந்தித்தல். புண்டரிகத்தைக் கிழித்தலால் உண்டாயிற்று. வந்த நாள்-சென்று நான் அவனைக் கண்ட நாளில் (வேபட்ட என் மனநிலையை அவன் ஒருவனே அறிவான் என்க.) |