116. இதன் முதலடி, சேந்தனாரது திருவீழிமிழலைத் திருவிசைப்பாவிலும் வந்தமை காண்க. ‘ஐவரோடும்’ என்ற எண்ணும்மை விரிக்க. ‘என்னிடை விளைந்த’ எனப் பாடம் ஓதுதல் சிறக்கும். கலாம்-பூசல்; இதளை இக்காலத்தார், ‘கலகம்’ என்பர். ஆள் ஆண்ட-ஆளாக ஆண்ட. பக்கல், ஏழன் உருபு, ‘வாயால் மொழிந்து’ என உருபு விரிக்க. மொழிந்து-மெய்ப் பொருளைக் கூறி ; உபதேசித்து, இறைவன் ஆசிரியனாய் வந்து அருள்செய்த குறிப்பு இதனுள்ளும் காணப்படுதல் காண்க. |