167. அடிகள்- (யாவர்க்கும்) தலைவர். ‘அடிகளாகியதம்’ என உரைக்க. குருள்-சுருள்; சடைமுடி. ‘‘அழகோ’’ ஓகாரம் சிறப்பு; எதிர்மறையாயின், ‘ஆளா அடிகள்’ என்பது பாடமாதல் வேண்டும். தரள வான்குன்றில்-முத்தினாலாகிய பெரிய மலைபோல. ‘‘ஒளியும்’’ என்ற உம்மை சிறப்பு. குவால். (மாடங்களின்) திரட்சி. ‘மாடங்களின்’ என்பது ஆற்றலாற் கொள்ளக்கிடந்தது. இருளெலாம்-இருள் முழுதும், ‘கிழியும் தஞ்சை’ என இயைக்க. |