17. மதி-ஞானம். இது, தாப்பிசையாய் நின்றது. ‘அது ஞானம்; இது ஞானம் என்று பரந்து திரிதற்கு ஏதுவாகிய சமய நூல்கள்’ என்க. ‘‘கற்று’’ என்றது, ‘அழைப்பு’ என்பதனோடே முடியும். அழைப்பு-கூப்பீடு; பிதற்றொலி-பிது, ‘பித்ரு’ என்பதன் சிதைவு. ‘எவ்வுயிர்க்கும் அப்பனாகிய உனது ஞானத்தின் (சிவஞானத்தின்) வழிநின்று என்றபடி’ செது-தீமை. ‘‘செதுமொழி சீத்த செவி’’ (கலி-68) என வந்தமை காண்க. சேராச் சிற்றம்பலம்’ என இயையும். ‘மதுவெள்ளம் போலும் திருவயிறு’ என்க. வயிற்றை இவ்வாறு உவமித்தார். கொப்பூழ், அவ்வெள்ளத்தில் தோன்றும் சுழிபோல்வது’ என்பது விளங்குதற்கு. ‘‘நீர் வெள்ளம்’ என்னாது, ‘தேன் வெள்ளம்’ என்றது, இனிமை புலப்படுத்தற்கு, ‘‘மதி வெள்ளம்,’’ வினைத்தொகை. வளைப்புண்டு. கவரப்பட்டு. உள்-உள்ளம். |