187. அல்லி-அகஇதழ். பழனம்-வயல். ஆமூர்-திருவாமூர். இது திருநாவுக்கரசர் திருவவதாரம் செய்த தலம். ‘‘நாவுக்கரசை’’ என்றதனை. ‘நாவுக்கரசுக்கு’ எனத் திரிக்க. ‘கொல்விடை’ என்பது ஐகாரம் பெற்று நின்றது. கொல்விடை போலும் விடை என்றபடி. கொல்விடை, விடலையர் தழுவுதற் பொருட்டு ஆயர் இனத்தில் வளர்க்கப்படுவன. விடை ஏறீ-இடபத்தை ஊர்பவனே. |