190. ‘‘நீ’’ என்பதொழிய, ‘‘புகலோகம்’’ என்பது முதல், ’’புண்ணியங்கள்’’ என்பது காறும் உள்ள அனைத்தையும் முதலிற் கூட்டுக. புக - புகுவதற்கு. லோகம் உண்டு என்று - வேறு உலகம் உண்டு என்று நினைத்து. ‘‘புவலோகம்’’ என்றது, ‘மேலுலகம்’ என்னும் அளவாய் நின்றது. புவலோக நெறி படைத்த-மேலுலகத்தை அடைவிக்கும் நெறியானே எய்திய. ‘புண்ணியங்களால்’ என உருபு விரித்து. அதனை, ‘‘சூழ’’ என்பதனோடு முடிக்க. புண்ணியங்களை எய்தினோர் அடியவர்கள். அகலோகம்-இவ்வுலகம் இத்திருப்பாட்டில் உயிரெதுகை வந்தது. |