7. திருவாலியமுதனார் திருவிசைப்பா24. கோயில்
243.
அதிர்த்த அரக்கன் நெரிய விரலால் அடர்த்தாய் அருளென்று துதித்து மறையோர் வணங்குந் தில்லைச் சிற்றம் பலந்தன்னுள் உதித்த போழ்தில் இரவிக் கதிர்போல் ஒளிர்மா மணியெங்கும் பதித்த தலத்துப் பவள மேனிப் பரமன் ஆடுமே. (8)
243. அதிர்த்த-ஆரவாரம் செய்த; (உமையை) ‘அஞ்சப் பண்ணிய’என்றுமாம். அரக்கன்-இராவணன். அடர்த்தாய்- துன்புறுத்தினவனே.உதித்த போழ்தில் விளங்கும் இரவி’ என ஒருசொல் வருவிக்க. ‘மணி,மாணிக்கம்’ என்பது வெளிப்படை, தலம்-நிலம்.