பாட்டு முதற்குறிப்பு அகராதி

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

25. கோயில்

250.

அரிவையோர் கூறுகந்தான் அழ
   கன்எழில் மால்கரியின்
உரிவைநல் லுத்தரியம் உகந்
   தான்உம்ப ரார்தம்பிரான்
புரிபவர்க் கின்னருள்செய் புலி
   யூர்த்திருச் சிற்றம்பலத்
தெரிமகிழ்ந் தாடுகின்ற எம்
   பிரான்என் இறையவனே.                      (4)
 


250.     மால்   கரி-   பெரிய  யானை.   உத்தரியம்-மேலாடை.
புரிபவர்-விரும்புபவர்.  ‘இன்னருள்செய்  எம்பிரான்’   என இயையும்.
இறைவன்-தலைவன்.  ‘‘இறையவனே’’  என்னும்  ஏகாரத்தைப் பிரித்து,
‘‘எம்பிரான்’’ என்றதனோடு கூட்டுக.


மேல்