பாட்டு முதற்குறிப்பு அகராதி

9. சேதிராயர் திருவிசைப்பா

28. கோயில்

286.

அறவ னேஅன்று பன்றிப் பின்ஏகிய
மறவ னேஎனை வாதைசெய் யேல்எனும்
சிறைவண் டார்பொழில் தில்லையு ளீர்எனும்
பிறைகு லாம்நுதற் பெய்வளையே.                  (8)
 


286.     அறவன்   -   அற     வடிவினன்.   மறவன்-வேடன்.
‘‘அறவன்,மறவன்’’ என்பன, ‘தன்னை அடைந்தாரை  இடுக்கண் நீக்கிக்
காப்பவன்’  என்னும்  குறிப்புணர்த்தி நின்றன.  வாதை-துன்பம். பிறை
குலாம்  நுதல்-பிறை  விளங்குவது  போலும்  நெற்றியையுடைய. பெய்
வளை-இடப்பட்ட  வளையினை  உடையவள்.  ‘இவள்  எப்பொழுதும்
உம்மையே  நினைந்து  முறையிடுகின்றாள்;   இவளது  வருத்தத்தைப்
போக்கீர்’ என்பது கருத்து.


மேல்