287. அருக்கன்-சூரியன். சூரியனைப் பல் இறுத்தது தக்கன் வேள்வியில். ‘‘இறுத்து, கொன்று’’ என்ற எச்சங்கள் எண்ணின்கண் வந்தன. கோள்-உயிரைக் கொள்ளுதல்; கொலை. இழைத்தீர்-செய்தவரே. எனும்-என்று சொல்லுவாள். ‘இவள் உம்பொருட்டு ஒன்றும் ஆகிலள்’ என்க. உம்பொருட்டு-உம்மை அடையவேண்டி. ஒன்றும் ஆகிலள்-ஒருபொருளும் ஆகாது அழிந்தொழிகின்றாள். ‘இவளைக் கடைக்கணித்தல் வேண்டும்’ என்பது குறிப்பெச்சம். இதனுள் முன்னைத் திருப்பாட்டில் ‘அன்று பன்றிப்பின் ஏகிய’ என்னும் பொருளைத் தொடர்ந்து, ‘அன்று அருக்கனைப் பல் இறுத்து, என்று வந்த பொருள் அளவே அந்தாதிபோலும் ! |