பாட்டு முதற்குறிப்பு அகராதி

1. திருவிசைப்பா

4. கோயில்

37.

அருட்டிரட் செம்பொற் சோதி
   யம்பலத் தாடு கின்ற
இருட்டிரட் கண்டத் தெம்மான்
   இன்பருக் கன்பு செய்யா
அரட்டரை, அரட்டுப் பேசும்
   அமுக்கரைக், கழுக்க ளாய
பிரட்டரைக் காணா கண்; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (3)
 

37.     ‘அருளினது  திரளாகிய  அம்பலம்’  எனவும், ‘இருளினது
திரள்போலும்     கண்டம்’     எனவும்       உரைக்க   எம்மான்
இன்பம்-சிவானந்தம்.    அரட்டர்-துடுக்குடையவர்   அரட்டு -துடுக்கு.
அழுக்கர்-மாசுடையவர். பிரட்டர் (பிரஷ்டர்) - நெறிதவறியவர். 


மேல்