51. பண்டறி சுட்டாய அகரச் சுட்டு, ‘‘செல்வம்’’ என்பதனோடு இயையும். கனா, நிலையாமை பற்றிவந்த உவமை. ‘சிந்தித்து’’ என்றது, ‘விரும்பி’ என்றவாறு. ஐவர், ஐம்புலன்கள் அழுந்தி-மிகப் பொருந்தி, அவமே-வீண்செயலிலே. பொடி-துகள். ‘அவர்க்கு அடிமை பூண்டேன்’ என்க. ‘இனி எனக்கு என்ன குறை’ என்பது குறிப்பெச்சம். |