269. காரரவு கரும் பாம்பு. ஐம்மதி-அழகிய சந்திரன். ‘‘கண்டேன்’’ என்றதைப் பெயராக்கி, ‘அதனை, ‘‘தோற்றாலும்’’ என்பதனோடு முடிக்க. ஆடிவருதல், வீதியின்கண் என்க. ‘நான் வளைகளைத் தோற்கும் அளவிற்குக் காதல் கரைகடந்து நிற்கவும், இவர் என்னை அருகணையவும் ஓட்டாது’ ஓட்டுகின்றார்; இவர் தம்மைக் காதலித்தார்க்கு அருளுந்திறம் இதுதான் போலும்’ என்றபடி. |