174. ‘தம்மை விண்ணுலகம் முழுவதும் வணங்கி நிற்கத் தாம்போய் அகந்தொறும் பிச்சைக்கு உழல்கின்றார்’ என்பதாம். ‘‘அடிகள்’’ என்ற உயர்வுச் சொல்லும் இங்கு நகைப்பொருட்டாயே நின்றது. தந்திரி வீணை- நரம்புகளையுடைய வீணை. சாதி-உயர்ந்த, கின்னரம்-யாழ் ; என்றது அதன் இசையை. வீணை முற்பட்டுப் பாட. யாழிசை அதனோடு ஒன்றி ஒலிக்கின்றது’ என்பதாம். ‘கீதமும் பாட’ என்பது பாடம் அன்று. ‘‘வீணை பாட’’ என, கருவி வினைமுதல்போலக் கூறப்பட்டது. |