2.‘‘இருட் பிழம்பு’’ என்றது, அறியாமையைச் செய்யும் ஆணவ மலத்தை. ‘‘சுடர்மணி விளக்கு’’ என்றது, அம்மலத்தின் நீங்கி விளங்கும் ஆன்ம அறிவினை, ‘‘தூயநற் சோதி’ எனப்பட்டதும் அதுவே. ‘ஒளியாய்’ என ஆக்கம் வருவிக்க. ‘‘சோதியுட் சோதி’’ என்றது. வாளா பெயராய் நின்றது. எனவே, ‘‘சுடர்மணி விளக்கினுள் ஒளி விளங்கும்’’ என்றது. இப்பெயர்ப் பொருளை விரித்தவாறாம். ‘‘பரஞ்சுடர்ச்-சோதியுட் சோதி யாய்நின்ற சோதியே’’ (திருமுறை-5.97. 3.) என்றும். சோதி யாய்எழும் ‘‘சோதியுட் சோதிய’’ (பெ. பு. தடுத்-193.) என்றும் வருவனவற்றால், இறைவன், ‘சோதியுட் சோதி’ எனப்படுதல் அறிக. ‘எறிந்து விளங்கும் சோதி’ என முடிக்க’ அடல்-வலிமை, பாகன்-நடத்துபவன். அறியாமை - அறியாதபடி. ‘அறியாமை நின்றாயை’ என இயையும். |