பாட்டு முதற்குறிப்பு அகராதி

7. திருவாலியமுதனார் திருவிசைப்பா

24. கோயில்

238.

இளமென் முலையார் எழில்மைந் தரொடும்
   ஏரார் அமளிமேல்
திளையும் மாடத் திருவார் தில்லைச்
   சிற்றம் பலந்தன்னுள்
வளர்பொன் மலையுள் வயிர மலைபோல்
   வலக்கை கவித்துநின்
றளவில் பெருமை அமரர் போற்ற
   அழகன் ஆடுமே.                         (3)
 


238.     ‘திளைக்கும்’   என்பது,   ‘திளையும்’  எனச்   சாரியை
தொகுக்கப்பட்டு     நின்றது.     திளைத்தல்-இன்பத்தில்    மூழ்கல்.
பொன்மலை   சிற்றம்பலத்தின்   வடிவிற்கும்,   வயிர  மலை இறைவ

னுக்கும்      உவமை. திருநீற்றுப்   பூச்சினால்  இறைவன்  திருமேனி
வயிரமலைபோல் காணப்படுவதாயிற்று. ‘கவித்தல்’ என்றது,  அபயமாகக்
காட்டுதலை.


மேல்