60. “நினைக்கும்” என்றது முற்று. நிரந்தரன் - நிலை பெற்றிருப்பவன். நிலாக் கோலம் - நிலாவினால் உண்டாகிய அழகு. நயம் -விருப்பம். பேசும் - வெளிப்படையாக எடுத்துச் சொல்வாள். “நங்கைமீர்’’ என்றது முதலியன, தலைவி கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியது. “ நங்கைமீர்” என்றதனைச் செவிலி கூற்றெனினும் இழுக்காது “ மனக்கு” என்றதில் அத்துச்சாரியை தொகுத்தல். மனக்கு இன்பவெள்ளம்-என் மனத்துக்கு இன்ப வெள்ளமாய் இருப்பவன். “நம்பி இன்பன், தருணேந்து சேகரன் |