கவர்ந்தமை பற்றி, ‘கள்வன்’ என்றாள்; எனினும், இஃது இகழ்ந்ததன்று; புகழ்ந்து கூறிய காதற் சொல்லேயாம். திவள் அம் மாளிகை -ஒளி வீசுகின்ற அழகிய மாளிகை. ‘‘நங்கையாள்’’ என்றது தலைவியை. நயக்கும் - விரும்புகின்ற. குழகன் - இளைஞன். ‘‘நங்கை யானைக்கும்’’ எனப் பாடம் ஓதி, அதற்கு, ‘தெய்வயானை’ என உரைப்பாரும் உளர். |