81. ‘இப் பௌவநீர்’ என இயைத்து, ‘நீந்துதற்கரிய பிறவியாகிய கடல்நீரை நீந்துகின்ற ஏழையேனுக்கு’ என உரைக்க. ஐவர் ஐம்பொறிகள். ‘உடன்பிறந்தோர் அனைவருமே பகையாய்விட்டமையின் எனக்கு யார் துணை’ என்றவாறு. கை வரும் பழனம்-பக்கங்களில் பொருந்தியுள்ள வயல்களில், குழைத்த-தளிர்த்த. செஞ்சாலி-செந்நெற் பயிர். ‘நீலப் பூக்களின் கொடிகளே களைகளாய் உள்ளன’ என்றபடி-செய் வரம்பு அரும்பு-வயல்களின் வரப்புக்களில் காணப்படுகின்ற. |