90. பரவை சூழ் அகலம்-கடல் சூழ்ந்த அகன்ற பூமி. அம் கண்-‘அழகிய கண்’ எனப்படும் அறிவு. ‘எண்ணில் புன்மாக்கள்’ எனவும், ‘புன்மாக்கள் அறிவுறு தமிழ்மாலை’ எனவும் இயைக்க. திருந்து உயிர்ப் பருவத்து அறிவு உறு-திருந்துகின்ற உயிரின் பரிபாக நிலையில் ஞானம் பெறுதற்கு ஏதுவான ( தமிழ்மாலை என்க). கருவூர்த் தேவரை, ‘‘கருவூர்’’ என்றது உபசாரம். துறை-புறப்பொருள் துறை ; கடவுள் வாழ்த்துப் பகுதி. ‘தமிழ் மாலையைப் பொருந்துகின்ற அரிய கருணையை யுடைய பரமர்’ என்க. பொருந்துதல்-உளங் கொண்டு ஏற்றல். செருந்தி, ஒருவகை மரம். |