134. நெக்கு-குழைந்து. ‘ஒருநாளும்’ என்னும் உம்மை தொகுத்தலாயிற்று. வழிமொழி மாலை-வணக்கம் கூறுகின்ற தமிழ்ப் பாடற்கோவை. ‘மாலை பண்ணிநின்று’ என இயையும். மழலையஞ் சிலம்பு-இனிய ஓசையை உண்டாக்குகின்ற சிலம்பு. ‘முடிமேலாக’ என ஆக்கம் வருவிக்க. ‘ஆவி, உயிருணர்வு’ என்பது மேலும் விளக்கப்பட்டது. என்னோ-காரணம் யாதோ ; ‘கருணையே காரணம் ; பிறிதில்லை’ என்பது கருத்து. கொல், அசைநிலை. |