33. உற்றாய்-யாவரையும் உறவாகப் பொருந்தியவனே. ‘உணர்வுள் கலக்கப்பெற்றுப் பொருந்திய ஐந்தெழுத்தும்’ என்க. ‘‘உணர்வுள்’’ என்பது முதலாக, ‘‘பெற்றேன்’’ என்பது ஈறாக உள்ளவை. தலைவியின் கூற்றைச் செவிலி அங்ஙனமே கொண்டு கூறியன. ‘உணர்வுகள்’ என்பது பாடம் அன்று. சுற்று ஆயசோதி- சுற்றிலும் வீசுகின்ற ஒளியையுடைய. ‘‘மகேந்திரம்’’ என்றது. இகரம் அலகுபெறாது நிற்க ஆரியம் போல நின்றது. ‘சூழ’ என்னும் செயவெனெச்சம், தொழிற் |
பெயர்ப் பொருட்டாய் நின்றது. ‘சூழச் சூழாத’ என இயையும். இதனுள் முன்னர் நின்ற சூழ்தல், சார்தல். பின்னர் நின்ற சூழ்தல், நினைத்தல். இருள் வாங்கி-அறியாமையைப் போக்கி, ‘‘குத்தாய்’’ என்பது, எதுகை நோக்கி, ‘குற்றாய்’ எனத் திரிந்தது. குத்தாய்-ஊன்றாதவனே; பொருந்தாதவனே. |