41. ‘என் உள்ளத்தை உருக்கி அதனுள்ளே ஊறுதல் உடைய தேறல் நீங்காமைக்கு ஏதுவாகிய திருக்குறிப்பு, என்க. தேறல்-தேன், என்றது பேரின்பத்தை. திருக்குறிப்பு, நடனத்தில் உள்ளது. ‘செல்வம் இல்’ என்பது, ‘செலவில்’ எனக் குறைந்து நின்றது. அருக்கர்- சுருக்கம் உடையவர்; பெருக்கம் இல்லாதவர். அள்ளல்வாய- நரகத்தின்கண் உள்ள. கள்ளர்-வஞ்சகர். அவியா-கெடாத. |