ஒளி வளர்-எவ்விடத்திலும் ஒளி பரத்தற்கு ஏதுவான. திருமணிச் சுடர்-அழகிய இரத்தினங்களின் ஒளி. கான்று-உமிழ்ந்து. சூழல்-இடம். ‘சூழல் எறி’ என இயையும். ‘சூழலாய்’ என ஆக்கம் வருவிக்க. அங்கெல்லாம்-தன் இடமெல்லாம். வம்பு உலாம் கோயில்-புதுமை பொருந்திய தலைமை வாய்ந்த இல்லங்களும். வளர் நிலை-உயர்ந்த பல நிலைகளையுடைய. செம்பொனால் அரும்பு-சிவந்த பொன்னால் இயன்று தோன்றுகின்ற. |