260. ‘‘எழுந்தருளாய் எங்கள் வீதியூடே’’ என்பதனை இறுதியிற் கூட்டுக. ஏதம் - குற்றம். முனிவர், பதஞ்சலி, வியாக்கிரபாதர் முதலியோர். ‘தில்லைவாழந்தணர்’ எனலும் ஆம். ‘‘கொழுந்தது’’ என்பதில் அது, பகுதிப்பொருள் விகுதி. கொழுந்து, முடிநிலை. ’மாத்திரை’ என்பதும் ஓர் காதணியே. வௌவ-வௌவினமையால் அழுந்தும்-துன்பத்தில் ஆழ்கின்ற. உயிர்க்கு-உயிர் நிற்றற்கு. அலமரும்-அலைகின்ற. ‘நீ எங்கள் வீதியூடே எழுந்தருளினால் என் உயிர் நிற்கும்’ என்றவாறு. |