பாட்டு முதற்குறிப்பு அகராதி

1. திருவிசைப்பா

4. கோயில்

36.

எட்டுரு விரவி என்னை
   ஆண்டவன், ஈண்டு சோதி
விட்டிலங் கலங்கல் தில்லை
   வேந்தனைச் சேர்ந்தி லாத
துட்டரைத் தூர்த்த வார்த்தைத்
   தொழும்பரைப் பிழம்பு பேசும்
பிட்டரைக் காணா கண் ; வாய்
   பேசாதப் பேய்க ளோடே.                     (2)
 

36.    ஈண்டு சோதி-மிக்க ஒளி;  இஃது ‘‘இலங்கு’’ என்பதனோடு
முடியும்.    அலங்கல்-மாலை;    என்றது    பொன்னரி  மாலையை;
இதனையுடையது தில்லை. தூர்த்த  வார்த்தை -  வஞ்சகச்     சொல். தொழும்பர்  - பிறர்க்கு    அடிமையாய்  நிற்பவர்.  பிழம்பு - இனிது
விளங்காத  சொல்;  முணுமுணுத்தல்.  பிட்டர் - நொய்யர்;  சிறியோர்.
இச்சொல்  ‘பிட்டம்’  என்பதினின்று;  பிறந்தது. ‘‘பிட்டர்  சொல்லுக்
கொள்ள வேண்டா பேணித் தொழுமின்கள்’’
(திருமுறை - 1-69-10)
என்று அருளிச்செய்தமை காண்க. 


மேல்