288. ஏயுமாறு-பொருந்தும் வகையில். ‘சேதிபர்கோன் தில்லை நாயனாரை ‘ஏயுமாறு உரைசெய்தன’ எனக் கூட்டுக. சேதிபர்-சேதிநாட்டவர். சேதியர்’ எனப் பாடங்கொள்ளுதல் சிறக்கும். கோன்-அரசன். ‘‘சேதிபர் கோன்’’ என்றதனால் ‘சேதிராயர்’ என்னும் பெயர்க் காரணம் விளங்கும். நயந்து-விரும்பி. உரைசெய்தன-பாடிய பாடல்கள். தூயவாறு-எழுத்துப்பிழை முதலியன இல்லாதவாறு. ‘‘துறக்கம்’’ என்றது இங்கு. ‘உடலைத் துறந்து சென்று அடையப்படுவது’ எனக் காரணப்பெயராய்ச் சிவலோகத்தைக் குறித்தது. ஆய இன்பம்-அடையத் தக்கதாய இன்பம்; சிவானந்தம். ஏனை இன்பங்கள் அன்னதாகாமை அறிக. இத்திருப்பாடலின் ஈற்றடி ஈற்றயற்சீர் வேறுபட்டு வந்தது. |