நெஞ்சைப் பிளந்தன’ என்றாள். நெக்கு வீழ்தரு நெஞ்சு - முன்பே உடைந்து அழிந்த மனம். ‘‘பாய்தல்’’ என்றது, ‘போழ்தல்’ என்னும் பொருட்டாய் நின்றது. நிறை - நெஞ்சினைத் தன்வழி நிறுத்துந்தன்மை. ‘‘இருப்பேனை’’ என்றதை, ‘இருப்பேன்மேல்’ எனத் திரித்து. அதனை, ‘‘படுந்தொறும்’’என்பதனோடு முடிக்க. இவ்வாறு திரியாமலே, ‘‘பக்கம் ஓட்டந்த’’ என்பதனை, ‘அணுகிய’ என்னும் பொருட்டாக்கி, அதனோடு முடித்தலும் ஆம். மூன்றாம் அடியை முதலடியின் பின்னர்க் கூட்டி உரைக்க. பக்கம் ஓட்டந்த-அருகில் ஓட்டந்த - அருகில் ஓடிவந்த, அலந்தேன் - வருந்தினேன். |