278. ஒண்ணுதலி. இதனுள்கூற்று நிகழ்த்திய தலைவி. ‘காரணமாச் சொன்ன’ என இயையும். ‘பண்ணு பத்து’ என இயைத்து வினைத்தொகையாக்குக. பண்ணுதல்-யாழைப் பண்ணுக்கு ஏற்ப அமைத்தல். ‘அங்ஙனம் அமைத்துப் பாடுதற்குரிய பத்துப் பாடல்கள்’ என்றவாறு. தலைப் பத்து-தலையாய பத்துப் பாடல்கள். பயின்று-கற்று. எண்ணுதலைப் பட்டு-யாவராலும் மதிக்கப் படுதலைப் பொருந்தி. அங்கு-சிவலோகத்தில். |