196. ஓவா-ஒழியாத, முத் தீ, ‘ஆகவனீயம், காருக பத்தியம், தக்கிணாக்கினி’ என்பன. அஞ்சு வேள்வி, ‘பிரமயாகம், தேவயாகம், பிதிர்யாகம், மானுடயாகம், பூதயாகம் என்பன. ஆறங்கம், ‘சிட்சை, கற்பம், வியாகரணம், நிருத்தம், சந்தோவிசிதி, சோதிடம்’ என்பன. இவை வேதத்தின் பொருளையும், ஒழுக்கத்தையும் அறிதற்குக் கருவியாகும். ஆவேபடுப்பார் - பசுக்களின் நெய். பால், தயிர்களை மிகுதியாகச் சொரிவர். அரங்கு-அம்பலம். |