240. ‘‘தீ மெய்த் தொழில்’’ என்றதை. ‘மெய்த் தீத்தொழில் என மாற்றி, ‘மெய்த் தொழில், தீத்தொழில்’ எனத் தனித்தனி முடிக்க. மெய்ம்மை - என்றும் ஒழியாமை. தீத்தொழில்-தீயை ஓம்பும் தொழில்; வேள்வி வேட்டல். வாமம்-இடப்பக்கம். ‘எடுத்த எழில் ஆர் வாம பாதம்’ என மாற்றிக் கொள்க. இறைவன், வலத் திருவடியை ஊன்றியும், இடத்திருவடியைத் தூக்கியும் நடனம் செய்தல் அறிக. ‘ பாதத்தின் கண்’ என உருபு விரிக்க. மழலை-இனிய ஓசையை உடைய. தீ மெய்-நெருப்புப்போலும் நிறத்தை யுடைய. |