எனவும் பாடம் ஓதுப. ‘‘தொண்டனேன்’’ என்பதன்பின், ‘‘ஆகலின்’’ என்னும் சொல்லெச்சம் வருவித்து, அதனை, ‘‘பொறுப்பர்’ என்பதனோடு முடிக்க. ‘புலியூராகிய தில்லை’ என்க. சேமம்- காவல். வட்டம்-எல்லை. கொண்டு-நினதாகக் கொண்டு. ஆண்ட-அதனை ஆளுதல் செய்த. ‘பூவடி, மலரடி’ எனத் தனித்தனி இயைக்க. பூ-பொலிவு. புராணம்-பழைமை. பூதங்கள் என்பது சிவகணங்கள் என்னும் பொருட்டாய் உயர் திணையாய் நின்றது. |