25. ‘‘கானே, வானே’’ என்ற பிரிநிலை ஏகாரங்கள் சிறப்புணர்த்திநின்றன. முரண் ஏனம்-வலிய பன்றி. களி ஆர் -களிப்புப் பொருந்திய. அருச்சுனனோடு ஆடல் தொடங்க நின்றமை குறித்து காளாய் என்று கூறினார். புளினக்காளை - வேடர்குல இளைஞன். ‘‘வாய்மொழி’’ என்றது, வேதத்தை. திரு-திருவருள். |