272. காணீர்-காணுங்கள். ஏகாரம், அசைநிலை. சேண்ஆர்-வானத்தைப் பொருந்திய. பூண் ஆர்-ஆபரணம் நிறைந்த, வனம்-அழகு. ஆண் ஆடுதல்-தனது ஆண்மையை (வீரத்தை)க் காட்டிநிற்றல். சிற்றம்பலவர் என்னுடைய கைவளைகள் கொண்டார்; (ஆயினும்) காமவேள் ஆண் ஆடுகின்றவா கண்டும் தாம் அருளார். ‘இது காணீரே’ எனக் கூட்டுக. |