74. ‘இளங்கிளை’ என்பதே ‘கிளைஇளையன்’ என மாறிநின்றது. ‘இளைய பிள்ளை’ என்றவாறு. சேய் - முருகன். ‘ இளங்கிளையாகிய முருகன்’ என்க. கிரி, கிரவுஞ்ச மலை. திளை - பலரும் இன்பம் துய்க்கின்ற. முளை இளங்களிறு-மிகவும் இளைய களிறு. ‘‘முருகவேள்’’ என்றதை. ‘‘களிறு’’ என்றதன் பின்னும் ‘‘பரிந்து’’ என்றதை, ‘‘சிறுமிக்கு’’ என்றதன் பின்னும் கூட்டுக. பரிந்து - அன்புகொண்டு |