241. கைதை-தாழை. குவிந்த-திரண்டுள்ள. கரை-கடற்கரை.அதன் இடப்பகுதிகள் பற்றி, ‘கரைகள்’ எனப்பலவாகக் கூறினார். திரை-அலை. ‘தில்லைச் சிற்றம்பலம்’ என இயையும், சிற்றம்பலம், இங்குக் கோயிலைக் குறித்தது. மல்கு-அழகு நிறைந்த. வரை-மலை. மலிந்த மணி-நிறைந்த இரத்தினங்களால் ஆகிய, ‘மண்டபத்து ஆடும்’ என இயையும். |