247. கோலம்-அழகு. ‘கோலக் கண்’ என இயையும், ‘‘கொடி ஏர் இடையீர்’’ என்றதில் ஏர், உவம உருபு. ‘‘இடையீர்’’ என்றது பாங்கியரை. பரம் ஆய-எப்பொருட்கும் முன்னதாகிய. பரஞ் சுடர்-மேலான ஒளி. சேல் உகளும்-கயல்மீன்கள் துள்ளுகின்ற. ஏல்-ஏற்றல்; முதனிலைத் தொழிற்பெயர். ஏற்றல்-எழுந்தருளியிருக்க இசைதல். ‘ஏலஉடை’ என்பது பாடம் அன்று. ‘‘இறை’’ என்றது. சொல்லால் அஃறிணையாதலின், ‘‘பரம், சுடர்’’ என்றவற்றோடு’ இயைந்து நின்றது. கொல்,ஐயத்துக்கண் வந்தது. |