191. களக மணி - நீல மணி. மாடம் - மேல்நிலம். சூளிகை - மேல்மாடத்தின் முகப்பு ‘மாடத்தைச் சூளிகை சூழ்ந்த மாளிகை’ என்க. அளக நுதல் - கூந்தலை உடைய நெற்றி. ‘‘மதி’’ என்றது. பிறையை. ‘மதிநுதலாராகிய ஆயிழையார்’ என்க. போற்றிசைப்ப (உன்னைத்) துதிக்க, தெளி - விளக்கம். |