199. களி வான் உலகு-களித்து வாழ்தற்குரிய வானுலகம். ‘அங்குள்ள கங்கை’ என்க. ‘பகீரதன் பொருட்டு வானுலகிலிருந்து வந்த கங்கையைச் சிவபெருமான் சடையில் தாங்கினார்.’ என்பது வரலாறு. ஒளி மால்-அழகையுடைய திருமால். முன்னே-உனது திருமுன்பில். வரம் கிடக்க-வரம் வேண்டிப் பாடு கிடக்க. ‘அவனுக்கு அருளாமல் அடியார்க்கு அருளுகின்றாய்’ என்றபடி. தில்லைக் கூத்தப்பெருமான் திருமுன்பில் திருமால் கிடந்த கோலத்தில் இருத்தல் காண்க. ‘‘வரங்கிடந் தான்தில்லை யம்பல முன்றிலம் மாயவனே’’ என்றார் திருக்கோவையாரினும் (86). தெளிவுஆர்- தெளிவுபொருந்திய. உறுவது-அடைவது. |