29. கடுப்பாய்-மிகுதியாய். ‘கடுப்பாய்க் கறங்க’ என இயையும். பறை, வேட்டைப் பறை. கறங்க-ஒலிக்க. உடுப்பு-உடை. சுரிகை- உடைவாள். ‘தோல் செருப்புச் சுரிகைகளுடன் நடப்பாய்’ என்க. நாதாந்தத்து அரையா-‘நாதம்’ என்னும் தத்துவத்திற்கு அப்பால் உள்ள தலைவனே! முன்னைத் திருமுறைகளில், ‘நாதம்’ என்னும் சொல் காணப்படினும், ‘நாதாந்தம்’ என்னும் தொடர் காணப்பட்டிலது. பதம்-பாதம். |