யாறு. அரிசிலின் கரைக்கண் உள்ளதும், இருமருங்கும் பொழிலால் சூழப்பட்டதும், கழனிகளை யுடையதும், நீண்ட மாளிகை சூழ்ந்ததும், மாடங்கள் நீடியதுமான உயர்திருவீழி’ என்க. ‘மாளிகை மாடம்’ என்பன இல்லத்தின் வகைகள். ‘தங்கு, சீர், செல்வம், தெய்வம், தான்தோன்றி’ ஆகிய அனைத்தும், ‘‘நம்பி’’ என்பதையே விசேடித்தன. சோதி-ஒளி. ‘தனது ஒளியாகிய மங்கை’ என்க. ‘‘வருந்தி மறப்பனோ’ என்றதை, ‘மறந்து வருந்துவனோ’ எனப் பின்முன்னாக்கி யுரைக்க. ‘வருந்த’ எனப் பாடம் ஓதுதலும் ஆம். |